டிவியில் நடித்து பின்னர் காமெடி வேடங்களில் சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹீரோவாக தன்னை நிலை நிறுத்தி வருகிறார் சந்தானம். திறமையை வளர்த்துக் கொள்ள அவர் வெட்கப்பட்டதில்லை அதனால்தான் இந்த வளர்ச்சி. தற்போது ’டிக்கிலோனா’ என்ற படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக ஷ்ரின் கான்ச்வாலா நடிக்கிறார்.
இப்படத்தில் சந்தானம் ஒரு கதாபாத்திரத்துக்கு இந்தியில் பேச வேண்டி உள்ளது. அதற்காக பாலிவுட் நடிகையான ஷ்ரின் கான்ச்வாலாவிடமே சந்தானம் இந்தி கற்று வருகிறார். படத்துக்கு மட்டும் வசன் பேச கற்கிறாரா அல்லது இப்படம் மூலம் இந்தியிலும் நுழைய திட்டமிட்டுள்ளாரா என்பது அவருக்கே வெளிச்சம்.
’டிக்கிலோனா’ படத்தின் போஸ்டர்களை சமீபத்தில் சந்தானம் வெளியிட்டார். அவை நல்ல வரவேற்பை பெற்றன. கார்த்திக் யோகி இப்படத்தை இயக்குகிறார்.