மும்பை:

கொரோனா ஊடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படுவதால், கொரோனா வைரஸ் குறைந்து வருவதாக அர்த்தமல்ல… என்று பிரபல இந்திபடப் பாடகி லதா மங்கேஷ்கர் குறிப்பிட்டு உள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார் 24ந்தேதி முதல் ஜூன் 30ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கிடையில், பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் திரைப்பட படப்பிடிப்பு, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.  பல திரையுலக பிரபலஙகள் பொதுமக்களுக்கு அட்வைஸ் வழங்குவது மட்டுமின்றி தங்களது புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றி பிரபலப்படுத்திவருகின்றன்ர.

இந்த நிலையில்,  பாலிவுட்டின் பிரபல பாடிகியான  லதா மங்கேஷ்கர் ரசிகர்களுக்கு கொரோனா பரவல் குறித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், நமஸ்கார், ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படுகிறது.

இருப்பினும், அனைவருக்கும் எனது உற்சாகமான வேண்டுகோள், போதுமான முன்னெச்சரிக்கைகள் மற்றும் எச்சரிக்கையுடன் இருங்கள்.. 

பூட்டுதல் (லாக்டவுன்) தளர்த்தப்படுவதால், வைரஸ் குறைந்துவிட்டது என்று அர்த்தமல்ல.

அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும். பாதுகாப்பாகவும் இருக்கவும்…

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.