டிகர் விஷ்ணு விஷால் நந்திதா, காளி, முனிஷ்காந்த்  நடித்த படம் முண்டாசுப்பட்டி. இதில் புகைப்படக்காராக இவர் நடித்தார். காமெடியை மையமாக வைத்து இதன் கதை அமைக்கப்பட்டிருந்தது. இப்படம் வெளியாகி 6 வருடம் ஆகிறது.
ரிலீஸ் ஆகி 6 வருடத்தை கடந்திருக்கும் ’முண்டாசுப்பட்டி’ பற்றி விஷ்ணு விஷால் மெசேஜ் பகிர்ந்திருக்கிறார்.

அதில்,’முண்டாசுபட்டி நகைச் சுவைபடம்தான், ஆனால் அதை எடுப்பதற்கு மிகவும் கடினமாக உழைத்தோம். அதை படக் குழு திறம்பட செய்து முடித்தது. 6 வருடம் கடந்திருந்தாலும் அதில் பணியாற் றிய நினைவுகள் மறக்க முடியாது. பட தயாரிப் பாளர் சி.வி.குமார், இயக்குனர் ராம்குமார் , நடிகர்கள் காளி, முனிஷ்காந்த். இசை அமைப் பாளர் சீன்ரோல்டன் உள்ளிட்ட அதில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சண்டை இல்லை, அருவா இல்லை, அதிரடியான துப்பாக்கிகள் இல்லை, ஒரே ஒரு கேமராவை கொண்டு கிளைமாக்ஸ் அமைத்தது வரவேற்பை பெற்றது ’ என குறிப்பிட்டிருக்கிறார்.