ஏர் இந்தியா விமான பயணிகள் முகக்கவசத்தை கழட்டிவிட்டு சாப்பிடுகிறார்கள்… விஸ்தாரா ஏர்லைன் முன்னாள் நிர்வாகி விமர்சனம்

Must read

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் ஜனவரி 27 ம் தேதி அதிகாரபூர்வமாக வாங்கியது.

இந்திய அரசின் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்குவதாக கூறி இதனை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவெடுத்தது, இதனைத் தொடர்ந்து டாடா நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.

டெல்லியில் இருந்து கொல்கத்தா வரை சென்ற ஏர் இந்தியா நிறுவன விமானத்தில் ஜனவரி 31 ம் தேதி விஸ்தாரா ஏர்லைன் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி சஞ்சீவ் கபூர் பயணம் செய்தார்.

தற்போது தனியார் வசம் கைமாறியிருக்கும் ஏர் இந்தியா விமான பயணத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் சேவை குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சஞ்சீவ் கபூர் இதன் சேவைக்கு 10 க்கு 5 மதிப்பெண் கொடுத்திருக்கிறார்.

விமானம் நன்கு சுத்தம் செய்யப்பட்டிருந்தது ஆனால் பொழுதை கழிக்க வைக்கப்பட்டிருந்த எனக்கான தொடு திரை சரியாக வேலை செய்யவில்லை என்று இப்போது ஓபராய் ஹோட்டல் குழுமத்தின் தலைவராக இருக்கும் சஞ்சீவ் கபூர் கூறியுள்ளார்.

விமானங்களில் டீ, காபி போன்றவை கொரோனா கட்டுப்பாடுகளால் தடை செய்யப்படுவதாக கூறப்பட்டாலும் மற்ற அனைத்து விமான சேவை நிறுவனங்களைப் போல் வழங்கப்படுகிறது.

இதுபோன்ற நேரத்தில் பொது இடத்தில் எந்த கட்டுப்பாட்டு குறித்தும் கவலையில்லாமல் பயணிகள் சாப்பிடுகின்றனர்.

சாப்பிட்ட பின் தங்கள் முகக்கவசத்தை மீண்டும் போட மறப்பதுடன், இது குறித்து விமான சிப்பந்திகளும் அவர்களுக்கு அறிவுறுத்துவதில்லை.

விமான சிப்பந்திகள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் பெயர் அச்சிடப்பட்ட பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

எனது பயண அனுபவத்தின் அடிப்படையில் ஏர் இந்தியா நிறுவன விமான சேவைக்கு 6 மதிப்பெண் கொடுக்கலாம் ஆனால் 5 தான் தரமுடியும் என்று குறிப்பிட்டுள்ள அவர் இது அந்த நிறுவனத்தின் சேவையை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல என்று ஓபராய் ஹோட்டல் குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கபூர் குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article