ஜெய்ப்பூர்: பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி, ஒரு கும்பலால் சரமாரியாக அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, ராஜஸ்தானில் உள்ள சித்தூர்கார் பகுதியை ஆட்சி செய்த  ராணி பத்மினியின் வரலாற்றை  மையமாக வைத்து  திரைப்படத்தை இயக்கி வருகிறார்.  இந்தப் படத்தில்ரன்வீர் சிங், தீபிகா படுகோனே உள்ளிட்டோர்  நடிக்கின்றனர்.

இதன் படபிடிப்பு, ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் கோட்டையில் நடந்தது. அப்போது கர்னிசேனா அமைப்பினர் படபிடிப்பு நடந்த இடத்துக்குள் நுழைந்து இயக்குனர் பன்சாலை சரமாரியாக  அடித்து உதைத்தனர். அவரது, ஆடையை கிழித்தனர்.

இதனால் அங்கு பதட்டமான சூழல்நிலை நிலவியது.  பன்சாலி படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு குழுவுடன் மும்பை திரும்பினார்.

தாக்குதல் நடத்திய கர்னிசேனா  அமைப்பினர், “ராணி பத்மினி கதை வரலாற்றை திரித்து, கொடுங்கோல் ஆட்சிசெய்த அலாவுதீன் கில்யுடன் தொடர்பு படுத்தி பன்சாலி இயக்கி வருகிறார். ஆகவேதான் அவரை தாக்கினோம்” என்று தெரிவித்தனர்.

ஆனால் ராணி பத்மினியை  தவறாக சித்தரிக்கவில்லை என்று இயக்குனர் பன்சாலி மறுத்துள்ளார்

அவர் மீதான  தாக்குதலுக்கு பாலிவுட் திரையுலகம் கடும் கண்டனம் தெரிவித்ததுள்ளது.   குற்றவாளிகள்மீது முதல்வர் வசுந்தரா ராஜே விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.