சனிப் பெயர்ச்சி 2017 : மீன ராசிக்கான பலன்கள்

Must read

னிப் பெயர்ச்சி 2017 : மீன ராசிக்கான பலன்கள்

மீன ராசிக்காரர்களுக்கு இதுவரை 9ஆம் இடத்தில் இருத்த சனி பகவான் 19.12.17 முதல் 26.12.20 வரை  10 ஆம் வீட்டில் அமர்ந்து பலன்களை தர உள்ளார்.  நன்மைகள் நடக்கும்.    உங்களின் முழுத் திறமையும் வெளிப்படும் நேரம் இது.

கணவன் மனைவி இடையே இருந்த சண்டைகள் தீரும்.  தந்தைக்கு நன்மை ஏற்படும்.  இழந்த பணம் திரும்ப வரும்.    வாழ்க்கைத் துணையின் பூரண ஆதரவு உண்டு.   வங்கிக் கடன்,  குழந்தை பாக்கியம்,  பொது நிகழ்வில் முதல் மரியாதை,  வழக்குகளில் வெற்றி ஆகியவை நிகழும்.

சனி பகவான் உங்கள் நான்காம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல் நலத்தில் அக்கறை தேவை.   ஜாமீன் கையெழுத்து இடுவது கேடு தரும்.   புதியவர்களிடம் கவனம் தேவை.   வாழ்க்கைத்துணைக்கு ஆரோக்யம் சீர் கெடும்.   அவருடன் சண்டை சச்சரவும் வர வாய்ப்புண்டு.  தூக்கமின்மையால் தவிப்பீர்கள்.

வியாபாரிகளுக்கு உங்களுக்கு தானாகவே சுறுசுறுப்பு உண்டாகும்.   கடை விரிவாக்கம்,  போட்டிகளை முறியடித்தல், வியாபார நுணுக்கங்களை அறிதல்,  புதிய ஒப்பந்தங்கள் நிகழும்.  கண்ணாடி,  ஆடை, பெட்ரோல் டீசல் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணி உயர்வும்  வேலைச்சுமை அதிகரிப்பும் உண்டாகும் மேலதிகாரிகலின் உதவி உண்டு.  இடமாற்றம் இருக்கக் கூடும்.  அதனால் ஊதியம் உயரும்..

மாணவர்கள் மற்றும் மாணவிகள் படிப்பில் ஆர்வம் கூடுவதால் வெற்றிக்கு தடை இல்லை.  .

கலைத்துறையினருக்கு மிகவும் நல்ல காலம் இது.   பிரபலமாகும் தருணத்தை சரியாக பயன்படுத்தவும்.

இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் நீங்கள் உச்சாணிக் கிளைக்கு முன்னேறுவீர்கள்

மூல நட்சத்திரத்தில் 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார்.  இந்த தினங்களில் ஆசைப்பட்டபடி வீட்டு வசதி,  ஷேர் மூலம் பண வருவாய், புதிய வேலை வாய்ப்பு, மகளின் திருமணம் ஆகியவை நிகழும்.

பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரையிலான தேதிகளில் சனி சஞ்சாரம் செய்கிறார்.  இந்தக் காலத்தில் பெரிய பதவிகள் கிட்டும். சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடிவுறும்

உத்திராடம் நடத்திரம் முதல் பாதத்தில் 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனி பகவான் சஞ்சரிக்கிறார்.  இந்த கால கட்டத்தில்  செலவினங்கள் அதிகரித்து எதிர்களால் துயரம் நேரிடும்.

வக்கிரச் சனி பலன்கள்

மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் வக்கிரமாக செல்கிறார்.  இந்த நேரத்தில் திருப்தியான பணவரவு உண்டு.    செலவுகளை கட்டுக்குள் கொண்டு வர போராட வேண்டி இருக்கும்.

பூராட நட்சத்திரத்தில் 10.5.19 முதல் 11.8.19 வரை, 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை சனிபகவான் வக்கிர சஞ்சாரத்தில் உள்ளார்.  இந்த நேரத்தில்  யார் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டாம்.

உத்திராடம் நட்சத்திர முதல் பாதத்தில் 2.5.20 முதல் 16.7.20 வரை சனிபகவானின் வக்கிர சஞ்சாரம் இருப்பதால்  ஆபரண சேர்க்கை, ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கைக்கு வாய்ப்புண்டு.

பரிகாரம் :   சனிக்கிழமையன்று லால்குடி இடயாற்று மங்கலத்தில்  உள்ள ஸ்ரீ லட்சும் நாராயணப் பெருமாளை வழிபட்டு  வர வேண்டும்.

More articles

Latest article