ஐதராபாத்:

பிரபல டென்னிஸ் வீராங்கனையான  சானியா மிர்சாவின் சகோதரி, இந்திய முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன் அசாருதீனின் மகனை மணக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து, அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  அசாருதீனின் மகனை சானியா மிர்சாவின் தங்கை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சானியா மிர்சாவின் சகோதரி அனம் மிர்சாவும், அசாருதீனின் மகனான முகமது அசாதுதீன்  சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சானியா மிர்சா, அதை ஒப்புக்கொண்ட நிலையில், இருவருக்கும் விரைவில் திருமணம் செய்ய உள்ளது. அதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.  இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறினார்.

அனம் மிர்சா – அசாதுதீன்  திருமணம் இந்தாண்டு டிசம்பர் மாதத்தில்  நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.