மும்பை

ந்திய கிரிக்கெட் வீரர் சங்கத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த உள்ளதாக முன்னாள் வீரர் எச்சரித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் சங்கத்தில் சுமார் 8000 முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர்.   இவர்களில் ஆண்கள், பெண்கள் மட்டுமின்றி மாற்றுத் திறனாளிகளும் உள்ளனர்.   அதாவது சுமார் 4000 முதல் 5000 ஆண் வீரர்களும் சுமார் 3000 பெண் வீரர்களும் மற்றும் நூற்றுக் கணக்கான மாற்றுத் திறனாளிகளும் உள்ளனர்.  இந்த சங்கம் லாபம் ஈட்டாத நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 11 முதல் 13 தேதிகளில் நடைபெற உள்ள தேர்தலில் ஐந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.   இவர்களில் மூவர் பிரதிநிதிகளாகவும் மற்ற இருவர் அதாவது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் இணைக்கப்பட உள்ளனர்.

இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர், “இந்த தேர்தலில் வெற்றி பெறுவோருக்கு எவ்வித லாபமும் கிடையாது.   இந்த தேர்தலில் போட்டியிட எவ்வித தடைகளும் இல்லை என்பதால் யாரும் போட்டியிடு வெல்ல முடியும்.  இதற்குப் பண பலம் பொருந்தியவர்கள் தேவையில்லை.   இதுவே விதிமுறை ஆகும்.

ஆனால் 100 டெஸ்ட் பந்தயங்களில் போட்டியிடுபவர்கள் மட்டுமின்றி 10 போட்டிகளில்  போட்டியிட்டவரும் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியும் என்னும் நிலையில்லை.   அப்படி ஒரு நிலை வரும்போது வாக்குகளைப் பெறப் பண பலம் தேவைப்படுகிறது.   அதிக அளவில் வாக்குகளைப் பெற அதிக செலவு செய்ய நேரிடுகிறது.

அவ்வாறு செலவு செய்ய ஒரு வீரருக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் உதவி செய்ய முன் வரும் சூழ்நிலை உள்ளது.  உதாரணத்துக்கு  எனக்கு முகேஷ் அம்பானி ஆதரவு இருந்து என்னால் 3000-4000 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற முடியவில்லை என்றால் அவரின் செல்வாக்கு மூலம் ஆதரவு அதிகரிக்கும்.  இது போல எதுவும் எதிர்காலத்தில் நடக்கலாம்.

இதற்கான வேலைகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இறங்கி விட்டதாகத் தோன்றுகிறது.  இது சரியில்லை என உறுப்பினர்கள் உணர்வதற்குள் சங்கம் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்துக்குள் செல்லும் வாய்ப்பு உள்ளது.   இந்த வருடத் தேர்தலில் அது போல நடைபெறவில்லை எனினும் எதிர்காலத்தில் நடக்க அதிகம் வாய்ப்புள்ளது” என எச்சரித்துள்ளார்.