லக்னோ:

பாலியல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள,  சின்மயானந்தா, அவர் மீது புகார் கூறிய மாணவியின் குரல் சோதனை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், சட்டக்கல்லூரி நிறுவனருமான சுவாமி சின்மயானந்தா மீது பாலியல் புகார் கூறி, வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்த சட்டக்கல்லூரி மாணவி, சின்மயானந்தாவிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். இருவரின் குரல் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

எஸ்.ஐ.டி.யால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி, தனது ஆசிரமத்தால் நடத்தப்படும் கல்லூரியில் படிக்கும் 23 வயது பெண் அளித்த புகாரின் அடிப்படையில், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு பிரிவு 376 சி கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று (அக்டோபர் 9 ம் தேதி) ஒரு போலீஸ் குழு முன்னாள் மத்திய மந்திரி சுவாமி சின்மயானந்த் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவி  ஆகியோரின் குரல் மாதிரிகளை எடுக்கும் வகையில், லக்னோவில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

“சின்மயானந்த் காலை 6 மணிக்கு லக்னோவிற்கும், சட்ட மாணவவி காலை 9 மணியளவிலும், அவர்களின் குரல் சோதனைக்காக மாநில தலைநகரில் உள்ள எஃப்.எஸ்.எல். க்கும் அழைத்துச் செல்லப்பட்டார்” என்று சிறை கண்காணிப்பாளர் ராகேஷ் குமார்  தெரிவித்து உள்ளார்..

“குரல் மாதிரிகளை எடுக்க நீதிமன்ற உத்தரவுகளைத் தொடர்ந்து காவல்துறையின் இரண்டு தனித்தனி குழுக்கள் அவர்களை லக்னோவுக்கு அழைத்துச் சென்றுள்ளன” என்று போலீஸ் சூப்பிரண்டு தினேஷ் திரிபாதி தெரிவித்தார்.

சின்மாயந்த், சட்ட மாணவி  மற்றும் மூன்று பேரின் குரல் மாதிரிகள் எடுக்கப்பட வேண்டும் என்று தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் ஓம்வீர் சிங் அக்டோபர் 4 ம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.