உலன் உதே: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 51 கிலோ எடைப்பிரிவு ஆட்டத்தின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் மேரிகோம்.

ரஷ்யநாட்டில் நடைபெற்று வருகிறது உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள். இதில் மொத்தம் 6 முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்தியாவின் மேரி கோமும் கலந்துகொண்டுள்ளார்.

காலிறுதிக்கு தகுதிபெறுவதற்கான போட்டியில் தாய்லாந்தின் ஜூடாமஸ் ஜித்பாங்கை 5-0 என்ற பெரிய வித்தியாசத்தில் வெற்றிக்கொண்டார். காலிறுதிப் போட்டியில் கொலம்பியாவின் இன்கிரிட் வாலன்சியாவுடன் மோதவுள்ளார்.

இந்த சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றிபெற்று, 7வது முறையாகவும் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை மேரிகோம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், 75 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய வீராங்கணை சவீட்டி பூரா, வேல்ஸ் நாட்டின் லாரன் பிரைசிடம் தோற்றுப்போனார்.