மும்பை: இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷயை ரிவர்ஸ் ஸ்விங் நிபுணர் என்று புகழ்ந்துள்ளார் இந்திய அதிரடி பேட்டிங் மன்னன் ரோகித் ஷர்மா.

‘மழை நின்றாலும் தூரல் நின்றபாடில்லை’ என்ற பழமொழிக்கேற்ப விசாகப்பட்டிணம் டெஸ்ட் துளிகள் இன்னும் நினைவில் சிந்திக்கொண்டேதான் உள்ளன.

இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் முகமது ஷமி எடுத்த 5 விக்கெட்டுகள்தான் அதிக பேசுபொருளாக உள்ளது. இந்நிலையில் ஷமியை தன் பங்கிற்கு புகழ்ந்து தள்ளியுள்ளார் ரோகித் ஷர்மா.

நேரம் செல்ல ஆடுகளம் பேட்ஸ்மென்களுக்கு சாதகமாக மாறக்கூடிய நிலையில், அணியின் வெற்றிக்கு ஒரு திறன்வாய்ந்த பந்துவீச்சாளர் தேவை. ஷமியிடம் அந்தத் திறன் இருப்பதை இப்போதல்ல, இதற்கு முன்னரே அடையாளம் கண்டுள்ளோம்.

நாங்கள் இருவரும் கொல்கத்தா போட்டியில் ஒன்றாக அறிமுகமானோம். இத்தகைய பிட்ச்களில் எப்படி திறமையாக பந்துவீச வேண்டுமென்று அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. பிட்ச் ரிவர்ஸ் ஆகும்போது பந்துவீசுவது அவ்வளவு எளிதல்ல.

நீங்கள் மிகச் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்து, பந்து ஆஃப் ஸ்டம்ப்பை நோக்கி வருமாறு செய்வது சாதாரண காரியமல்ல. ஆனால், ஷமி அதை சிறப்பாக செய்யக்கூடியவர். அவர் அந்தக் கலையில் நிபுணர். பழைய பந்தை வைத்துக்கொண்டு அந்த வித்தையை சிறப்பாக செய்யக்கூடியவர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.