விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சங்கத்தமிழன்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், நிவேதா பெத்துராஜ் மற்றும் ராஷி கண்ணா இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.

கடந்த மார்ச் 4-ம் தேதி இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.

இந்நிலையில், ‘சங்கத்தமிழன்’ ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவியும், ஆடியோ உரிமையை சோனி நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.

அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரை, கம்பம், தேனி ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது.