பா.ஜ.க.வில் பொறுப்பு கிடைத்த சந்தன வீரப்பன் மகள் சபதம்..
மூன்று மாநில வனப்பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ’’சந்தனக்கடத்தல்’’ வீரப்பன் கடந்த 2004 ஆம் ஆண்டு போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
அப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த வீரப்பனின் மகள் வித்யா இப்போது சட்டப்படிப்பு முடித்து விட்டு பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் பா.ஜ.க.வில் இணைந்த வித்யாவுக்கு அந்த கட்சியில், மாநில இளைஞர் அணி துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பொறுப்பு ஏற்றதும் வித்யா ஒரு சபதம் மேற்கொண்டுள்ளார்.
என்ன சபதம்?
‘’சாதி வேற்றுமையை எதிர்த்துப் போராட நான் உறுதி பூண்டுள்ளேன். ஜாதிகள் கிடையாது. இங்கே எல்லோரும் சமம். இந்த செய்தியை மாநிலம் முழுக்க கொண்டு செல்வேன்’’ எனக் கூறும் வித்யா’’ நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல நமது பிரதமர் மோடி ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார். அவரது செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பா.ஜ.க..வில் இணைந்துள்ளேன்’’ என்கிறார்.
-பா.பாரதி.