பிரபல மாடல் அழகியும் நடிகையுமான சனம் ஷெட்டி பல விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சனம். ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்தார் சனம். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள சனம் ஷெட்டி அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு சனம் ஷெட்டி தனது காதலருடன் டின்னர் சாப்பிடும் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சனம் ஷெட்டியின் கையை பிடித்தவாறு புகைப்படம் உள்ளது.

அந்த போட்டோவுக்கு என் உலகை ஒளிரச் செய்துவிட்டீர்கள் மோனே என்று பதிவிட்டுள்ளார் சனம் ஷெட்டி. சனம் ஷெட்டியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சனம் ஷெட்டி ஏற்கனவே இலங்கையை சேர்ந்த மாடலான தர்ஷனை காதலித்தார். தர்ஷனுடன் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷன், நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு சனம் ஷெட்டியுடனான காதலை முறித்துக் கொண்டார்.

https://www.instagram.com/p/CLUC6pVhXbj/