இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் , நடிகை கீர்த்தி சுரேசும் திருமணம் செய்து கொள்ள போவதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.

அனிருத்தின் பிறந்தநாளுக்கு அவரை வாழ்த்தி ட்வீட் போட்டார் கீர்த்தி. அத்துடன் தான் அனிருத்துடன் சேர்ந்து எடுத்த இரண்டு புகைப்படங்களை வெளியிட்டார்.

இதனையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக வதந்தி தீயாக பரவியது.

ஆனால் இந்த வதந்தி கொஞ்சமும் ஆதாரமற்றது என இருவருக்கும் நெருக்கமான வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. அத்துடன் இருவரும் நல்ல நண்பர்கள், அவரவர் வேலைகளில் பிஸியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.