தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் ஜிவி பிரகாஷ், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தை ராஜேஷ் எம் இயக்குகிறார்.

இதில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், ரேஷ்மா, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசைப் பணிகளையும் ஜி.வி.பிரகாஷே கவனித்துக்கொள்ள, சன் என்டர்டைன்ட்மென்ட் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இப்படம், நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய பாடல் ஒன்றை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். இப்பாடல் மற்றும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். ‘டா டா பாய் பாய்’ எனும் இப்பாடல் வரிகளை கானா வினோத் எழுதியுள்ளாராம்.