தமிழ்,தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஷனம் ஷெட்டி..

ஷனம் ஷெட்டியுடன் மாடலிங் படப்பிடிப்புகளின் போது பிக் பாஸ் புகழ் தர்ஷன் நெருக்கமாகியுள்ளார்.

இருவரும் திருமணம் செய்வது பிக்பாஸ் நிகழ்ச்சியால் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆகியும் தர்ஷன் திருமணத்துக்கு மறுப்பதாக தெரிவித்து ஷனம் ஷெட்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார்.

வெளிநாட்டில் ஷூட்டிங் சம்மந்தமாக செல்வதற்கு ரூ.15 லட்சம் வரை நான் செலவழித்தேன். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷனுக்கு வாய்ப்பு கிடைக்கவும் பலவகைகளில் உதவி புரிந்தேன்.

தர்ஷனின் நண்பர் மற்றும் தர்ஷன் இணைந்து என்னை மிரட்டுகிறார்கள். என்னைப்பற்றி பொய்யான கருத்துகளை தர்ஷன் பரப்பி வருகிறார். எனவே தர்ஷன் மீது நம்பிக்கை மோசடி,கொலை மிரட்டல் உட்பட வழக்குகளின் கீழ் புகார் கொடுத்துள்ளேன், இந்தப் புகார் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது” என கூறியுள்ளார் .