‘பட்டாஸ்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கர்ணன்’ படத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் தனுஷ்.

ரஜிஷா விஜயன் நாயகியாக நடிக்கவுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் .இப்படத்தில் தற்போது நடிகை லட்சுமி பிரியா இணைந்துள்ளாராம்.

வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு துவங்கியிருக்கும் இந்நிலையில், ‘கர்ணன்’ என்ற தலைப்பை மாற்றக் கோரி சிவாஜி சமூகநலப் பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் கெளரி கிஷனும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனைத் தனது ட்விட்டர் பதிவில் கெளரி கிஷன் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் படம் தவிர்த்து விஜய்யுடன் ‘மாஸ்டர்’ மற்றும் ’96’ தெலுங்கு ரீமேக்கான ‘ஜானு’ ஆகிய படங்களிலும் கெளரி கிஷன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.