நியூயார்க்: உலகின் பொருளாதாரத்தையும் மனிதர்களின் வாழ்வையும் மிகப்பெரிய கேள்விக்குள்ளாக்கியிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இப்போதைய நிலையில், அந்த வைரஸ் தொற்றால் சீனா, தென்கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால், இந்த நாடுகள் அன‍ைத்துமே 40 டிகிரி அட்சரேகையில் அமைந்துள்ளவை என்பதுதான்.

ஆனால், சீனாவுக்கு அருகிலுள்ள பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடான இந்தியாவை இந்த வைரஸ் தாமதமாகவே தாக்கியுள்ளது மற்றும் அதன் பரவலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, கொரோனா வைரஸ் தொற்றலுக்கு நிலவமைப்பு மற்றும் காலநிலை உள்ளிட்டவையும் முக்கிய காரணியாக இருக்கிறது என்ற கருத்தும் இதன்மூலமாக வலுப்பெறுகிறது.