கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான வுஹானுக்கு முதல் முறையாக பயணிக்கிறார் அதிபர் ஜி ஜின்பிங்

Must read

பீஜிங்:

புதிய வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மத்திய சீன நகரமான வுஹானுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது முதல் பயணத்தை மேற்கொண்டார்.

இந்த நகரின் அருகேயுள்ள சில நகரங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் இன்று காலை சீன அதிபர் ஜி ஜின் பிங் வந்தடைந்ததாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அதிபர் பார்வையிட உள்ளதுடன், அங்கு பணியாற்றி வரும் மருத்துவ ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நோயாளிகளை நேரில் சந்தித்து பேச உள்ளதாவும் இது குறித்து வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பணியில் ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கிலும் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தாலியும் தங்கள் நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இஸ்ரேல், வைரஸ் பாதிப்புக்கு உள்ளான நபர்களை தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற உத்தரவை வெளியிட்டுள்ள ஸ்பெயின், அதனை சுற்றியுள்ள அனைத்து பள்ளிகளையும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவிக்கயில், கொரோனா வைரஸ் இப்போது பல நாடுகளில் காலடி வைத்துள்ளது என்றும், இது மிகவும் அச்சுறுத்தலை உண்டாக்கும் வைரஸ் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் அவர் கூறினார். இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், சமூகம் மற்றும் தனிநபர் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

இதுவரை, 113,000 க்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 3,900 க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் நோயால் உயிரிழந்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 136-ஆக அதிகரித்து உள்ளதாகவும், 80 ஆயிரத்து 750 பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 59 ஆயிரம் பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து தேறி வருகின்றனர். ஆனால் வைரஸின் பரவலைத் தடுக்க இத்தாலி அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

More articles

Latest article