சிஏஏவுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி சைக்கிள் பேரணி: அகிலேஷ் யாதவ் தொடங்கி வைத்தார்

Must read

லக்னோ:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இன்று சமாஜ்வாதி கட்சி சார்பில் உ.பி. மாநிலத்தில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

மத்தியபாஜக அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி கள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், மாணவர்கள் என  போராட்டங்கள்  தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில், யோகி தலைமயிலான பாஜக ஆளும் உ.பி. மாநிலத்தில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏக்கள் இன்று சைக்கிள் பேரணி நடத்தினர்.

இந்த பேரணி லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து மாநில சட்டமன்றம் வரை நடைபெற்றது. இந்த பேரணியை கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தொடங்கி வைத்தார்.

More articles

Latest article