சந்திராயன் மற்றும் இதர விண்கலத்திற்கு சேலம் உருக்காலையில் இருந்து தயாரிக்கப்பட்ட, தரமான இரும்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா மற்றும் இஸ்ரோ இணைந்து, இஸ்ரோவால் தயாரிக்கப்படும் கடுங்குளிர் ஏவூர்தி இயந்திரத்திற்கு, ரஷியன் தரம் கொண்ட ICSS-1218-321(12X18H10T) இரும்புகளை பயன்படுத்த முடிவெடுத்துள்ளன. நாளை அதிகாலை ஏவப்படும் விண்கலத்தில் இந்த வகையிலான இரும்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்பு மையத்தை சேர்ந்த அதிகாரிகளும், ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியாவை சேர்ந்த அதிகாரிகும் ஒன்று சேர்ந்து, சேலம் இரும்பு உருக்காலையில் இருந்து சில இரும்புகள் சோதனைக்காக பெற்றுள்ளனர். இந்த இரும்புகளில், இஸ்ரோவால் வழங்கப்பட்ட, எலக்ட்ரோ கசடுகள் மற்றும் இரும்புகளுக்கான அடுக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரும்பு காயில் 4 மி.மீட்டர் அளவில் இருந்து 2.3 மி.மீட்டர் அளவுக்கு தடிமன் கொண்டிருப்பதை போல இஸ்ரோவால் குளிரூட்டப்ட்டு, இவைகளே தற்போது சந்திராயன் 2 விண்கலத்தில் உள்ள கடுங்குளிர் ஏவூர்தி இயந்திரத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது.
இஸ்ரோ நிர்வாகிகள் தரப்பில், சேலம் உருக்காலையில் இருந்து பெறப்பட்டுள்ள இரும்பு காயில்கள், வெளிநாட்டு தரம் கொண்ட காயில்களை விட தரம் கொண்டவையாக இருப்பதாக தற்போது உறுதியும் செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த திட்டம் தொடரும் என்று நம்பும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா மற்றும் இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்பு மைய அதிகாரிகள், இதை தொடர்ந்து மேக் இன் இந்தியா மூலமாக வரும் நாட்களில் இரு அமைப்பும் இணைந்து மேற்கொள்ளும் என்றும், இதர விண்கலத்திலும் இதுபோன்றதொரு இரும்பு காயில்களே பயன்படுத்தப்படும் என்றும் நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளனர்.