சேலம்: சேலம் அம்மாபேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை  நடத்தி, பணம் இரட்டிப்பு தருவதாக மக்களிடம் இருந்து ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டு மோசடி செய்யப்பட்ட நபரிடம்  வங்கி கணக்குகளில் இருந்து  மேலும்  ரூ.2 கோடி பணம் முடக்கப்பட்டு இருப்பதாக,  சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை மண்டபத்தில் சோதனையிட்டு ரூ.12.68 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளியை பறிமுதல் செய்தனர். அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயாபானு, ஜெயபிரதா, பாஸ்கர், சையத் மஹ்மூத் ஆகிய 4 பேரை கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனர்.

இதனிடையே கைதான 4 பேரும் மோசடி செய்த பணத்தை வங்கிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் கைதான சையத் மஹ்மூத் பெயரில் சேலம் தனியார் வங்கியில் இருந்த ரூ.84 லட்சம் பணத்தை முடக்கினர். தொடர்ந்து, அறக்கட்டளை விஜயாபானு, ஜெயபிரதாவுக்கு எந்தெந்த வங்கிகளில் கணக்குகள் இருக்கிறது என போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சேலத்தில் உள்ள 2 தனியார் வங்கிகளில் இருவரது பெயரிலும் 7 சேமிப்பு கணக்குகள் இருந்ததை கண்டறிந்தனர்.

அவற்றில் விஜயாபானு பெயரில் ரூ.1.10 கோடியும், ஜெயபிரதா பெயரில் ரூ.90 லட்சமும் பணம் இருந்தது. உடனே 2 தனியார் வங்கிகளுக்கும் கடிதம் வழங்கி, அந்த 7 கணக்குகளில் இருந்த ரூ.2 கோடி பணத்தையும் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர்.

சேலத்தைத்தை உலுக்கிய அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  செயல்பட்டு வந்த  புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை   ரூ.500 கோடி வரை மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. 

இந்த அறக்கட்டளையை வேலூரை சேர்ந்த விஜயாபானு, ஜெயபிரதா உள்ளிட்ட சிலர் நடத்தி வந்தனர். இவர்கள் தங்கள் அறக்கட்டளை மூலம் மலிவு விலையில் உணவு, இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, பல்வேறு தொழில்கள் குறித்த பயிற்சி அளித்துள்ளனர். அப்படி வந்தவர்களிடம் நட்புடன் பழகியதுடன், அறக்கட்டளையில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி தருவோம் மற்றும் இரட்டிப்பு தொகை தருவதாக அறிவித்தனர். இதனை நம்பி பொதுமக்கள் பலர் அவர்களிடம் பணம் முதலீடு செய்தனர். அவர்களுக்கு ஆரம்பத்தில் அதற்காக நிறைய பணம் தரப்பட்டுள்ளது. இதை நம்பி மேலும் பலர் பணத்தை முதலீடு செய்தனர்.

இந்த வழக்கில்  அடுத்தடுத்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.  அறக்கட்டளை நிர்வாகியான வேலூர் விஜயாபானுவின் டிரைவரான சையத் முகமதுவின் வங்கி கணக்கில் ரூ.84 லட்சம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.இதையடுத்து அந்த வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டது.  ஏற்கனவே அறக்கட்டளை செயல்பட்டு வந்த  அந்த திருமண மண்டபத்திய சோதனையின்போது,   அங்கிருந்து ரூ.12 கோடியே 65 லட்சம் பணம், 2½ கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் இந்த பண இரட்டிப்பு மோசடி தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகி விஜயாபானு, ஜெயபிரதா, பாஸ்கர், சையத் முகமது உள்பட 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் இதுவரை 119 பேர் புகார் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புகார் கொடுத்தவர்களில் ஆந்திரா, வேலூர் பகுதிகளை சேர்ந்தவர்களும் அதிகமாக உள்ளார்கள். இந்த மோசடி வழக்கில் கைதான விஜயாபானு மற்றும் ஜெயபிரதாவின் 6 வங்கி கணக்குகள் ஏற்கனவே முடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் அழகாபுரம் பகுதியில் தனியார் வங்கி ஒன்றில் விஜயாபானுவின் கார் டிரைவரான சையத் முகமது என்பவர் கணக்கு இருக்கிறதாம். அந்த வங்கி கணக்கில் ரூ.84 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து அந்த வங்கி கணக்கை முடக்கி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து கைதான மேலும் சிலருடைய வங்கி கணக்குகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்துள்ளனர்.

இதனிடையே கைதான அறக்கட்டளை நிர்வாகி வேலூர் விஜயாபானு, ஜெயபிரதா, பாஸ்கர், சையத் முகமது ஆகியோர் ஜாமீன் கேட்டு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதேநேரம் நிர்வாகிகள் அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டு வருகிறார்கள். காவலில் எடுத்து விசாரித்த பின்னரே பல உண்மைகள் தெரியவரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.