சென்னை:
சென்னையில் நாளை முதல் நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தக்காளியின் மொத்த விலை மேலும் 10 ரூபாய் அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தையில் நேற்று 90 ரூபாய்க்கு விற்ற தக்காளி, இன்று 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்பனையாகிறது.

கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து வருவதால் கடும் விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவு துறை அதிகாரிகளுடன் அமைச்சர் பெரிய கருப்பன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்வது போல், ரேசன் கடைகளிலும் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.