சாஃப்ட்வேர் நிறுவனங்களில் 2% மட்டுமே ஊதிய உயர்வு….ஊழியர்கள் அதிர்ச்சி

Must read

டெல்லி:
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்த ஆண்டு 2 சதவீதம் மட்டும் ஊதிய உயர்வு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பளத்தை அதிகளவில் வாரி வழங்கும் துறைகளில் தகவல்தொழில்நுட்ப துறை முதன்மையாக இருக்கிறது என்றால் அது மிகைய £க இருக்காது. உலகம் முழுவதும் இந்த துறைக்கு மவுசு அதிகம். மென்பொருள் நிறுவனங்களில் பதவி உயர்வு மூலம் உயர்ந்து செல்வதும் பெரிய விஷயமல்ல. சம்பளம் கூடுவதே இங்கு முக்கிய காரணியாக திகழ்கிறது.

மென்பொருள் நிறுவன ஊழியர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் ஆண்டு ஊதிய உயர்வு அறிவிப்பு தான் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதனால் தற்போது இந்த துறையில் 150 பில்லியன் டாலர் வர்த்தகம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த ஆண்டு இத்துறையின் நிலை தலைகீழாக மாறியுள்ளது என்பது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்த கூடிய வகையில் உள்ளது.

‘‘இந்த ஆண்டு ஊதிய உயர்வு 2 சதவீதம் மட்டுமே இருக்கும் என்றும், சில நிறுவனங்களில் மட்டும் இது 6 சதவீதமாக இருக்கும் என்று இந்த துறை பணியாளர் நியமன மேலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், ‘‘கடந்த ஆண்டு 10 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது’’ என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த துறை தற்போது பெரும் மிக அழுத்தத்தில் உள்ளது. அமெரிக்காவின் ‘ஹெச் 1பி’ விசா தொடர்பான அறிவிப்புக்கு முன்னரே இந்த நிலை இருந்தது. இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கடந்த 3 காலாண்டு முடிவுகளும் இதை பிரதிபலித்தன. கட ந்த ஆண்டு நிலைமையை இந்த ஆண்டும் தக்க வைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது’’என்று இந்திய ஆவோன் ஹெவித் நிறுவன பங்குதாரர் ஆனந்தோராப் கோஸ் கூறினார்.

இன்போசிஸ் நிறுவனத்திலும் இந்த ஆண்டு ஊதிய உயர்வு 2 முதல் 6 சதவீதம் வரை தான் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.. இதை அந்த நிறுவனம் உறுதி செய்ய மறுத்துவிட்டது. எனினும்,‘‘ கடந்த ஆண்டை போன்ற நிலையை உருவாக்க முயற்சி செய்யப்படுகிறது’’ என்று அந்நிறுவன துணைத் தலைவர் ரிச்சர்ட் லோபோ கூறியுள்ளார்.

அவுட் சோர்சிங் நிறுவனமான எம்பேஸிஸ் நிறுவனத்தில் சராசரியாக 6 சதவீத ஊதிய உயர்வு இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.. ‘‘ இந்த ஆண்டு ஊதிய உயர்வு நடுத்தரமாக இருக்கும்’’ என்று அந்நிறுவன மனித வள துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், ‘‘ஊதிய குறைப்பு கண்டிப்பாக இருக்காது. ஆனால் உயர்வு கடந்த ஆண்டை விட குறைவாக தான் இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

More articles

Latest article