குழந்தைகள் தினம் : தனது 11 மாத குழந்தைக்கு கார் பரிசளித்த நடிகர்!

Must read

மும்பை

நேற்று கொண்டாடப்பட்ட குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்தி நடிகர் சயிஃப் அலிகான் தனது 11 வயது மகனுக்கு கோடிக்கணக்கில் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார்.

பாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகர் சயிஃப் அலிகான்.  இவர் பிரபல கிரிக்கெட் வீரர் பட்டோடி மற்றும் பிரபல இந்தி நடிகை ஷர்மிளா தாகுரின் மகன்.   இவருடைய மனைவி நடிகை கரீனா கபூர்.    இவரும் இந்தித் திரையுலகை கலக்கும் ராஜ்கபூர் குடும்பத்தை சேர்ந்தவர்.    இவர்களின் மகன் தைமூர் 11 மாதக் குழந்தை.   வரும் டிசம்பர் மாதம் ஒரு ஆண்டு நிறையப்போகும் தைமூருக்கு நேற்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சயிஃப் அலிகான் ரூ.1.3 கோடி மதிப்புள்ள சொகுசுக் காரை பரிசாக வழங்கி உள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் சாயிஃப், “இந்தக் காரின் நிறம் சிவப்பு.  எனது மகன் தைமூருக்கு மிகவும் பிடித்த நிறம்.  அதனால் இந்தக் கார் அவனுக்கு எனது குழந்தைகள் தினப் பரிசாகும்.   இந்த காரின் பின் இருக்கையில் குழந்தைகளுக்கான பிரத்தியேக இருக்கை ஒன்றை அமைத்துள்ளேன்.   முதல் சவாரி தைமூரை அதில் அமரவைத்து செய்யப் போகிறேன்”  என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article