‘தோழர்” என்ற சொல்லுக்கு நயன்தாராவே பொறுத்தமானவர்: திரைப்பட இயக்குநர் அதிரடி கருத்து

Must read

‘தோழர்” என்ற சொல்லுக்கு நயன்தாராவே பொறுத்தமானவர் என்று திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து இவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

“தோழர் என்ற சொல்லுக்கு பொருத்தமானவர் கோபியை விட நயன்தாரா தான். artiste value இல்லை என்பதால் அறத்தை விட எத்தனையோ சிறந்த படங்கள் வெளிவராமலே போயிருக்கிறது தெரியுமா.

அறம் போல் ஆயிரம் கதைகளை எழுதி விட முடியும். ஆனால் அதில் நடிக்க ஒருவனும் முன் வரமாட்டான். ஒரு saleable நடிகன் நடிக்க முன் வராமல் எந்த தயாரிப்பாளரும் வரமாட்டான். அப்படி தயாரித்தாலும் ஒருவனும் வாங்க, விநியோகிக்க வர மாட்டான்.

அறம். வெளியானதுக்கும் கவனம் பெற்று கொண்டாடப் படுவதற்கும் காரணம் நயன்தாரா தான். தோழர் நயன்தாரா தான்!” என்று சங்ககிரி ராஜ்குமார் பதிவிட்டுள்ளார்.

 

More articles

Latest article