மலையாள படமான பிரேமம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி.
அதற்கு முன்பு சாய் பல்லவி தாம் தூம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் பின்னணியில் நடித்து உள்ளார். அது மட்டுமின்றி டிவி ரியாலிட்டி ஷோக்களில் அவர் நடனம் ஆடி உள்ளார்.
அடுத்து தெலுங்கில் லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தெலுங்கு சினிமா துறையில் வேகமாக பரவி வரும் தகவல் என்னவென்றால் சாய் பல்லவி இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்ற உள்ளார் என்பது தான்.