சகாரா மோசடி: 18ஆயிரம் கோடி திரும்ப கொடுத்துவிட்டதாக கூறுகிறது?

Must read

புதுடெல்லி:
காரா நிறுவனம் முதலீட்டாளர்களிட்ம வாங்கியதில் 18ஆயிரம் கோடியை திருப்பி கொடுத்து விட்டதாக சுப்ரீம் கோர்ட்டில்  கூறியது.  ஆனால் இதை ஜீரணிக்க முடியவில்லை என்று நீதிபதிகள் கூறினர்.sahaa
முதலீட்டாளர்களிடம் வாங்கிய 20,000 கோடிக்கும் அதிகமான பணத்தை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக சகாரா குழும நிறுவனங்கள் மீது  சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது.
. இவ்வழக்கில் சகாரா தலைவர் சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 4-ந் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பின்னர் பரோலில் வெளியே வந்தார். பரோல் காலம் முடிவடைந்த நிலையில், மேலும் 300 கோடியை செலுத்தும் வகையில் பரோலை ஆகஸ்ட் 3ம் தேதி வரை நீதிபதிகள் நீட்டித்தனர்.
இந்த பரோலை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று கூறிய நீதிபதிகள், பிணைத் தொகை 300 கோடியை செலுத்த தவறினால் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர். பின்னர் இந்த பரோல் செப்டம்பர் 16ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
இதன்படி மொத்தம் 500 கோடியை சுப்ரதாராய் செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், நேற்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் உத்தரவிட்டபடி 300 கோடியை செலுத்த தயாராக இருப்பதாக சுப்ரதா ராய் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
       இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது,  சகாரா  நிறுவனம் முதலிட்டாளர்களிடம் வாங்கிய 18ஆயிரம் கோடி ரூபாயை திருப்பி கொடுத்துவிட்டதாக கூறியது.
         இதுகுறித்து கூறிய,  நீதிபதிகள்  குறுகிய காலத்தில் இவ்வளவு பணம் எப்படி திரும்ப ஒப்படைக்கப்பட்டது  இது ஜீரணிக்க முடியவில்லை என்றனர்.
       மேலும், விசாரணை செப்டம்பர் 16ல் நடைபெறும். அப்போது “நீங்கள் பணத்தை திரும்ப கொடுத்ததற்கு ஆதாரம் எங்களுக்கு  காட்ட வேண்டும் என்றனர்.

More articles

Latest article