கனிமொழியை பொதுச் செயலாளராக்க வேண்டும்!: தி.மு.க.வில் எழும் முழக்கம்

Must read

தி.மு.க.வில், “மகளிரணி செயலாளராக இருக்கும் கனிமொழியை பொதுச் செயலாளராக ஆகக்க வேண்டும்” என்ற குரல் எழுந்துள்ளது.
நீண்டகாலமாக கலை, இலக்கியத்துறையில் கவனம் செலுத்தி வந்தவர் கனிமொழி. ஆகவே, அப்பா மு.கருணாநிதியின் இலக்கிய வாரிசாகாவே அறியப்பட்டார்.
ஆனால் அவரது பாதையும் அரசியல் நோக்கி பயணித்தது. கட்சியில் மகளிரணி செயலாளர், ராஜ்யசபா எம்.பி. என்று முழு அரசியல்வாதியாக வலம் வருகிறார்.
 
Untitled
இந்த நிலையில்தான் அவரது ஆதரவாளர்கள், “ கட்சியின் மூத்த தலைவரான அன்பழகன் வகித்துவரும் பொதுச் செயலாளர் பதவியை கனிமொழிக்கு அளிக்க வேண்டும்” என்று குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களின் ஒருவரான ஆரோக்ய எட்வின், “ கனிமொழியை கழகத்தின் பொது செயலாளராக நியமிக்க வேண்டும் என்பது எங்கள் ஆவல். அதற்கு இதுவே சரியான தருணம்” என்று முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.   குறைந்தபட்சம், “சற்குணபாண்டியன் மறைவை அடுத்து காலியாக இருக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவியேனும் கனிமொழிக்கு வழங்கப்பட வேண்டும்” என்கிறார்.
தி.மு.க.வில் ஒலிக்க ஆரம்பித்திருக்கும் இந்த புதிய முழக்கம், எந்த மாதிரி விளைவை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

More articles

1 COMMENT

Latest article