திருநெல்வேலி

ம்மை இடைத் தரகர்கள் மூலம் அமலாக்கத்துறை மிரட்டியதாகச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி ஒரு மருத்துவரிடம் ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில் அவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.   அவர் அலுவலகத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை செய்ததில் முக்கிய ஆவணங்கள் பல கிடைத்துள்ளன

இன்று தமிழக சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

அந்த சந்திப்பில் அப்பாவு,

“மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் இடைத்தரகர்கள் மூலம் என்னை மிரட்டின. அவர்கள் என்னை ஊரை விட்டு  போகச் சொன்னார்கள், மேலும் செல்போன் நம்பரை மாற்றச் சொன்னார்கள். என்னிடம் 3 மாதமாக இடைத்தரகர்கள் பலர் பேசினார்கள். 

எனக்கு மட்டுமின்றி என்னைப்போன்று எல்லோருக்கும் மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டல் விடுக்கின்றன. 

எங்களிடம் பண பேரம் பேசி படியவில்லை என்றால் நோட்டீஸ் அனுப்பி அமலாக்கத்துறை எச்சரிக்கிறது. ஆனால் நான் சரியாக இருக்கிறேன்  எனக்கு என்ன வந்தாலும் மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார் என்று அவர்களிடம் தெரிவித்துள்ளேன்”

என்று கூறியுள்ளார்.