91 பேருடன் வெடித்துச் சிதறியது ரஷ்ய ராணுவ விமானம்? தீவிரவாதிகள் சதி?

Must read

கோப்பு படம்

ரஷ்யாவில் இருந்து 91 பேருடன் புறப்பட்ட ராணுவ விமானம், மாயமானது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்ய ராணுவத்துக்குச் சொந்தமான Tu-154 ரக விமானம், அநாட்டு நேரப்படி இன்று அதிகாலை ஐந்து மணி 20 நிமிடங்களுக்கு சோச்சி நகரில் இருந்து புறப்பட்டது. இதில் ராணுவ இசைக்கலைஞர்கள், செய்தியாளர்கள் என 91 பேர் பயணித்தனர்.
புறப்பட்ட 20 நிமிடங்களில் அந்த விமானத்துடனாக தகவல் தொடர்பை ரஷ்ய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் இழந்தது.  மேலும் அருகில் உள்ள  விமான நிலையங்களில் உள்ள ரேடார்கள் மூலமும் அந்த  விமானத்தை கண்டறிய முடியவில்லை.

“சிரியாவுக்குச் சென்ற இந்த விமாண், கருங்கடலின் மேலே பறந்து கொண்டிருந்த போது மாயமாகியுள்ளது” என்று ரஷ்ய  பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
சிரிய உள்ளாநாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா, தனது ராணுத்தை அனுப்பியுள்ளது. ஆகவே சிரியாவைச் சேர்ந்த போராளிக்குழுக்கள் ஏதேனும், இந்த விமானத்தைக் கடத்தியிருக்கலாமோ என்ற அச்சமும் எழுந்தது.
இந்த நிலையில், “மாயமான விமானம், கருங்கடலில் விழுந்துவிட்டது” என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை அறிவிததுள்ளது. ஆனால் இந்த விமானம் ஏன் சிரியாவுக்குச் சென்றது என்பது குறித்தும், விமானம் கடலில் விழுந்ததற்குக் காரணம் தொழில் நுட்ப கோளாறா  அல்லது தீவிரவாதிகள் சதியா என்பது குறித்தும் தெரிவிக்க பாதுகாப்புத்துறை மறுத்துவிட்டது.
 

More articles

Latest article