கராச்சி:
ல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது. இந்து இந்தியர்களிடைய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
220 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்து கராச்சியில் உள்ள மாலிர் சிறையில் அடைத்தனர். அவர்களை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள்

220 இந்திய மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கராச்சியில் உள்ள மாலிர் சிறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் லாகூர் வருகிறார்கள். அங்கிருந்து வாஹா எல்லை வந்து இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
கடந்த வாரம் இந்திய கடற்படையினர் பாகிஸ்தான் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை மீட்க பாகிஸ்தான் அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று மீனவர்கள் சங்கம் குற்றம்சாட்டியிருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசு இந்திய வீரர்களை விடுதலை செய்துள்ளது ஆச்சரியமளிக்கிறது.
இன்னும் 219 மீனவர்கள் விடுதலை செய்யப்படாமல் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.