உள்ளாட்சித் தேர்தல்:  9 மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை

Must read

சென்னை:
ள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 9 மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் தேதிக்குள் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் ஏற்கனவே கெடு விதித்துள்ளது. ஆனால், மாநில தேர்தல் ஆணையம் இதுவரை தேர்தல் தேதியை அறிவிக்காமல், தேர்தல் பணிகளைச் செய்து வருகிறது. உச்சநீதிமன்றம் அளித்த அவகாசம் முடிய இன்னும் 10 நாட்களாக உள்ள நிலையில், மாநில தேர்தல் ஆணையம் இன்னும் தேர்தல் தேதியை அறிவிக்காமல்  இழுத்தடித்து வருகிறது. இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டுள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 9 மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் மாவட்டச் செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள்  கலந்து கொள்ள உள்ளனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் வரும் 6-ம் தேதி ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article