சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து, தமிழக அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் 6ந்தேதி ஆலாசனை நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ந்தேதிக்குள் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் ஏற்கனவே கெடு விதித்துள்ளது. ஆனால், மாநில தேர்தல் ஆணையம் இதுவரை தேர்தல் தேதியை அறிவிக்காமல், தேர்தல் பணிகளை செய்து வருகிறது. உச்சநீதிமன்றம் அளித்த அவகாசம் முடிய இன்னும் 10 நாட்களாக உள்ள நிலையில், மாநில தேர்தல் ஆணையம் இன்னும் தேர்தல் தேதியை அறிவிக்காமல்  இழுத்தடித்து வருகிறது. இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டுள்ளது.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் வரும் 6-ம் தேதி ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவித்து உள்ளது. இதுகுறித்து  மாநிலத் தேர்தல் ஆணையம்  சார்பில், அங்கீகரிக்கப்பட்ட  அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள தகவலில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வரும் 6-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 மாதம் அவகாசம் கேட்டு மனு! உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மக்களை குழப்பும் திமுக அரசு…