Skip to content
  • Thu. Mar 19th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா வர்த்தக செய்திகள்

இந்திய ரூபாய் மதிப்பின் வரலாறு காணாத வீழ்ச்சி 4வது நாளாக தொடர்கிறது…….

Sep 26, 2022
மும்பை: இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி இன்று 4வது நாளாக தொடர்கிறது. இன்று மேலும் 0.68% வீழ்ச்சி அடைந்து ரூ.81.55 ஆக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  இன்று 4வது நாளாக வரலாறு காணாத வீழ்ச்சியடைந்தது.  அமெரிக்க மத்திய வங்கி யான ஃபெடரல் ரிசா்வ், வட்டி விகிதங்களை 75 அடிப்படை விகிதாசார புள்ளிகள் (0.75 சதவீதம்) உயா்த்தி 3 முதல் 3.25 சதவீதமாக்கியது. அந்த வங்கி தொடா்ந்து மூன்றாவது முறையாக வட்டி விகிதங்களை 0.75 சதவீதம் உயா்த்தியது.  இதன் காரணமாக, தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாகவே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது.

சர்வதேச பங்கு சந்தைகள் அழுத்தத்தில் காணப்படும் நிலையில், இந்திய பங்கு சந்தையில் பலத்த சரிவில் காணப்படுகின்றது. குறிப்பாக தொடர்ச்சியாக 4வது நாளாக சரிவில் காணப்படுகின்றது. கடந்த அமர்வில் 80.99 ரூபாயாக முடிவடைந்திருந்த ரூபாயின் மதிப்பானது, இன்று 81.55 ரூபாயாக தொடங்கிய நிலையில், அது தற்போது 81.52 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது. இது மேலும்  சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டுச் சந்தையில் அமெரிக்க கரன்சியின் வலிமை, உள்நாட்டு பங்குகளின் முடக்கம், நிலையான கச்சா எண்ணெய் விலை ஆகியவையும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 9 வர்த்தக அமர்வுகளில் 8 அமர்வில் ரூபாயின் மதிப்பானது 2.28% சரிவில் காணப்படுகின்றது.    இதற்கிடையில் இந்திய ரிசர்வ் வங்கியும் வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது பின்னர் சந்தைக்கு சாதகமாக அமையலாம் என்றாலும், தற்போதைக்கு முதலீடுகள் வெளியேறவே ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவு வழிவகுக்கலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இன்று நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 41 காசு குறைந்து 81.50 என்ற அளவில் வீழ்ச்சியடைந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 725 புள்ளிகள் சரிந்து 57,372 புள்ளிகளிலும்,  தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 243 புள்ளிகள் சரிந்து 17,083 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது.

[youtube-feed feed=1]

Post navigation

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன்.. 200 கோடி மோசடி வழக்கில் டெல்லி நீதிமன்றம் உத்தரவு…
மன்மோகன் சிங் பிறந்தநாள்: ராகுல் காந்தி, பிரதமர் மோடி வாழ்த்து…

Related Post

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

இந்தியா

டெல்லி பாலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து – 9 பேர் பலி…

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இந்தியா தமிழ் நாடு

2027ல் செயல்பாட்டுக்கு வருகிறது குலசேகரபட்டினம் ஏவுகணை ஏவுதளம்! நாடாளுமன்றத்தில் தகவல்

உலகம்

உலகம்

போர் நீடிக்கும் அபாயம் காரணமாக வாரத்திற்கு 4 நாள் வேலை… இலங்கை அரசு அறிவிப்பு

March 17, 2026 Sundar
உலகம்

“காலாண்டு அறிக்கை அவசியமில்லை”… அமெரிக்கப் பங்குச்சந்தையில் பெரிய மாற்றம்…

March 17, 2026 Sundar
உலகம்

காபூலில் உள்ள மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்! 400 பேர் பலி, 250 பேர் காயம்…

March 17, 2026 A.T.S Pandian
உலகம்

“அமெரிக்க குடியுரிமை சரண்டருக்கு 80% ஆஃபர்”… இந்திய பாஸ்போர்ட் வாங்க வரிசை கட்டி நிற்பார்களா ?

March 16, 2026 Sundar
இந்தியா உலகம்

போர் எதிரொலியாக இந்தியா – துபாய் இடையே விமான சேவைகள் ரத்து! ஏர் இந்தியா அறிவிப்பு

March 16, 2026 A.T.S Pandian

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer