டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 90வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மன்மோகன் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதுபோல பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  “இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதிகளில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது பணிவு, அர்ப்பணிப்பு மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான பங்களிப்பு ஆகியவற்றில் சில ஒற்றுமை கள் இல்லை. அவர் எனக்கும், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் உத்வேகமாக இருக்கிறார். அவரது நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்காக நான் பிரார்த்திக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,   “முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் வாழ பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அதுபோல டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்ஜி அ ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறி உள்ளார்.