ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலாலா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறுதான் ‘சைரா’ படத்தின் கதைக்கரு.

இப்படம் மூன்று மொழிகளில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது . நரசிம்மா ரெட்டியாக சிரஞ்சீவி நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்க அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா, அனுஷ்கா, ஜெகபதிபாபு, சுதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கும் இந்த நிலையில் கடைசி நாள் படப்பிடிப்பின்போது அனுஷ்காவுக்கு காலில் காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு பாதிக்கக்கூடாது என்பதற்காக இதை காட்டிக்கொள்ளாமல் நடித்துள்ளதாகவும் தற்போது அவர் மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.