விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கம் இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது .

இதனிடையே, விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது .

இந்நிலையில், விஜய்யின் 65-வது படத்தை கோப்ரா பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க உள்ளதாகவும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பான புகைப்படத்தை பதிவிட்டு, ரசிகர் ஒருவர், இது உண்மையா? என கேட்டிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அஜய் ஞானமுத்து, “இது யார் பாத்த வேலைனு தெரியலையே” என கமெண்ட் அடித்திருந்தார். இதன்மூலம் அவர் விஜய்யின் 65-வது படத்தை இயக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.