ஐ.நா. சபையின் நிரந்தர இந்திய பிரதிநிதியாக ருச்சிரா காம்போஜ் நியமனம்

Must read

ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதியாக செயல்பட்டு வந்த தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ். திருமூர்த்தி ஓய்வு பெற்றதை அடுத்து அந்த பதவிக்கு தற்போது பூடானுக்கான இந்திய தூதராக இருக்கும் ருசிரா காம்போஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

1987 ம் ஆண்டு ஐ.எப்.எஸ். தேர்ச்சி பெற்ற ருசிரா காம்போஜ், யுனெஸ்கோ-வுக்கான நிரந்தர பிரதிநிதியாகவும், தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய தூதராக ஆணையராகவும் பணிபுரிந்துள்ளார்.

ஆகஸ்ட் 1 முதல் ஐ.நா. சபையின் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் ருசிரா காம்போஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

58 வயதாகும் ருசிரா காம்போஜ் 1964 ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் லக்னோ-வில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More articles

Latest article