சென்னை: ஆர்டிஓ அலுவலகங்கள் எனப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்   (Regional Transport Office, RTO) இனிமேல் சனிக்கிழமைகளில் செயல்பட வேண்டும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை உத்தரவிட்டு உள்ளது. ஓட்டுநர் உரிமம் உள்பட ஏராளமான பணிகள் நிலுவையில் உள்ளதால், அவற்றை விரைந்து முடிக்கும் வகையில் சனிக்கிழமை அலுவலக பணி நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ) உள்ளன. சுமார் 99 அலுவலகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அலுவலகமானது  இந்திய  மோட்டார் வாகனச் சட்டம், 1988இன் பிரிவு 213 (1)இன் கீழ் அமைக்கப்பட்ட மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் அலுவலகம் ஆகும். இந்தச் சட்டத்தின் பல்வேறு விதிகளை செயற்படுத்துவது இதன் பொறுப்பாகும்.இது மாநில அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்குகின்றது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இது செயல் பட்டு வருகிறது. .

இந்த அலுவலகத்தின் முதன்மை நோக்கங்கள் என்பது,  ஓட்டுனர் உரிமங்களையும் வழங்க வேண்டும்,  வாகனங்கள்  ரிஜிஸ்ட்ரேஷனை செய்வது. ஒரே தடவை சாலை வரியை ரிஜிஸ்ட்ரேஷன் செய்யும் போது வசூல் செய்தல். வண்டிகள் மீதான அனைத்து வரிகளையும் கட்டணங்களையும் எவ்விதக் கசிவுமின்றி வசூலித்து அரசின் வருமானத்தைப் பெருக்குதல். சாலைப் பாதுகாப்பை கூட்டுதல் மற்றும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குதல்; வாகனங்களில் மாசுபடிதலைக் குறைத்தல் உள்பட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழ் நாட்டின் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமை செயல்பட உத்தரவிடப்பட்டு உள்ளது.   சென்னை மாநகரில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும் (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மீனம்பாக்கம் மற்றும் செங்குன்றம் உட்பட) அலுவலகங்களுக்குச் செல்வோர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு சனிக்கிழமையன்று பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. .

தற்போது, ​​அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால், அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை சனிக்கிழமைகளில் செயல்பட அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்களுக்கு மட்டுமே சேவை வழங்கப்பட்டுள்ளது.