காஷ்மீர் தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை கோரும் ஆர் எஸ் எஸ்

Must read

டில்லி

காஷ்மீர் மாநிலம் புல்வானாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர் எஸ் எஸ் வலியிறுத்தி உள்ளது.

நேற்று மாலை சுமார் 2500 க்கு மேற்பட்ட எல்லை காவல் ரிசர்வ் படையினர் 78 வாகனங்களில் ஸ்ரீநகரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர்.   அப்போது புல்வானா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவில் ஜெய்ஷ் ஈ முகமது அமைப்பின் தற்கொலைப் படை தாக்குதலால் சுமார் 40 வீரர்கள் மரணம் அடைந்தனர்.   அத்துடன் ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

இதற்கு நாடெங்கும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.   பிரதமர் மோடி,  காங்கிர்ஸ் கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி , சோனியா காந்தி உள்ளிட்ட பலரும் இரங்கள் தெரிவித்துள்ளனர்.   பாஜகவின் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ் அமைப்பு இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் பொதுச் செயலர் சுரெச்ஷ் பையாஜி, “பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் அவர்களின் கோபம் மற்றும் நாட்டின் மீதான எரிச்சலை காட்டுகிறது.   அரசு இந்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கயை உடனடியாக எடுக்க வேண்டும்.  தாக்குதலில் மரணம் அடைந்தோரின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.

ஆர் எஸ் எஸ் அமைப்பின் கூட்டு அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் இணை செயலர் சுரேந்திர ஜெயின், ” இந்த தாக்குதல் பாகிஸ்தான் ஆசியுடன் நடந்துள்ளது.   ஆகவே இந்தியா உடனடியாக அந்நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

More articles

Latest article