மும்பை:

கில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது ஆர்எஸ்எஸ் அமைப்பு  தொடர்ந்த அவதூறு வழக்கில்  அடுத்த மாதம் (ஜூன்) 12ம் தேதி நேரில் ஆஜராக பிவாண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு மும்பை பிவாண்டி பகுதியில்  நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட் டத்தில பேசிய ராகுல், மகாத்மா காந்தியை கொன்றது  ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்தான் என்று கூறினார்.. இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ராகுல்காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்றும்,  ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்த குன்ட்டே என்பவர் பிவான்டி நீதிமன்றத்தில், ராகுல்காந்தி மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஏற்கனவே இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு பிவான்டி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் ராகுல்காந்தி உச்சநீதி மன்றத்தில் பிவான்டி சம்மனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இதன் காரணமாக அந்த சம்மன் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் அவதூறு வழக்கு இன்று மீண்டும்  மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி கோர்ட்டில் விசாரணைக்F வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கில் வரும் ஜூன் 12ம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்ப நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.