ஆர்எஸ்எஸ்கார்களின் கிறிஸ்தவம் இல்லா பகுதி பிரசாரம்: வேலைய ஆரம்பிச்சுட்டாங்க!

Must read

ஜார்கண்ட் மாநிலம் ஆர்கி பகுதியில் கடந்த பத்தாண்டுகளில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பழங்குடியின மக்கள் பலர் இந்து மதத்திற்கு மீண்டும் வந்திருப்பதாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பாஜக ஆட்சியில் இருக்கும் ஜார்கண்ட் மாநிலத்தில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் கடந்த மாதம் “கிறிஸ்தவர்கள் இல்லாத பகுதி” (Christianity-free block campaign) என்ற பிரசாரத்தை மேற்கொண்டு வந்தனர்.

கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில், வீடு, வீடாகச் சென்று, அவர்கள் சொந்த மதத்தில் இருந்து தவறான கருத்துகளைக் கூறி மாற்றப்பட்டிருப்பதாக எடுத்துச் சொல்லி, இந்தப் பரப்புரையை மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக ஆர்கி பகுதியில் வசிக்கும் சுமார் 53 குடும்பத்தினர் மீண்டும் இந்து மதத்திற்கு மாறி இருப்பதாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர், பழங்குடியின மக்கள் இயற்கையை வழிபடுவோரே தவிர, அவர்கள் இந்துக்களல்ல என்று கூறியுள்ளார்.

அவர்களை இந்துக்கள் என நம்ப வைத்து இத்தகைய பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

ஆனால், தாங்கள் இப்போது செய்து வருவது மதமாற்றம் இல்லையென்றும், தாய் மதத்திற்கே திரும்பிவரச் செய்வதற்கான பிரசாரமே என்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் கூறுகின்றனர்.

பழங்குடியின மக்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாக வற்புறுத்தி வேறு மதத்தைத் தழுவுமாறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ரகுபர்தாஸ் எச்சரித்துள்ளார்.

அதாவது கிறிஸ்தவ மதத்திற்கு மாறச் செய்வோர் மீது என்பதே அதன் பொருளாகும். சரி.. ஆர்எஸ்எஸ் காரங்க அவங்க வேலையை ஆரம்பிச்சுட்டாங்க. .அவ்வளவுதான்..

More articles

Latest article