டெல்லி நாடு முழுவதும் வர்த்தக சிலிண்டர் விலை இன்று  மேலும் ரூ.101 உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இதுவரை மொத்தம் ரூ.770 உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் உணவு விடுகளில் உணவுப்பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

எரிபொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதை குறைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராடி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள், இதன்மீதான வரிகளை குறைக்காமல்  ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி, விலை உயரவை மக்கள் தலையில் சுமத்தி வருகின்றனர்.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துவிட்ட நிலையில், சமையல் எரிவாயு விலையின் சிலிண்டர் விலையும் 15 நாட்களுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

இன்று (டிசம்பர் 1ந்தேதி) 19 கிலோ எடையுள்ள  ஒரு வணிக  சிலிண்டருக்கு ரூ.101 அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால், இதுவரை சிலிண்டர் விலை ரூ.2,134க்கு விற்பனையான நிலையில், தற்போது .ரூ.2,134க்கு  விற்பனையாகிறது.

வணிக பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஓராண்டில் ரூ.770 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இதனால் ஹோட்டல்களில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.