சென்னை: கடந்த மாதம் சற்றே குறைந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது. அதிகபட்சமாக இன்று சவரனுக்கு ரூ.600 வரை உயர்ந்துள்ளது. இது பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 600 உயர்ந்து 45,280க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி 77.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தென்னிந்திய பெண்களுக்கு தக்கத்தின்மீது அலாதியான மோகம்.  எவ்வளவுதான் படித்திருந்தாலும், தங்களது தங்கம் மீதான ஆசையை ஒருபோதும் கைவிடுவது இல்லை.  தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடுதான் என்று பெருமை பட்டுக்கொண்டாலும், நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து வருவது அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சற்றே குறைந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது திருமண மாதங்களான ஐப்பசி, கார்த்திகை பிறந்துள்ளதால், மீண்டும் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இன்று அதிக பட்சமாக சவரனுக்கு ரூ.600 வரை உயர்ந்துள்ளது.

ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 5,660 ஆகவும், இதேபோல் 24 கேரட் தங்கம் விலை ₹ 6,175 (1 கிராம்) ஆகவும் உள்ளது.