ரூ.3 ஆயிரம் கோடியில் ரெயில்வேக்கு சிசிடிவி கேமரா

Must read

டில்லி:

11 ஆயிரம் ரெயில்கள், 8 ஆயிரத்து 500 ரெயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த பட்ஜெட்டில் 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இது குறித்து ரெயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘395 ரெயில் நிலையங்கள், 50 ரெயில்களிள் மட்டுமே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, உள்ளூர் ரெயில்கள் உட்பட 11 ஆயிரம் ரெயில்களிலும், 8 ஆயிரத்து 500 ரெயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது.

பட்ஜெட்டில் ரெயில்வேக்கு ஒதுக்கப்படும் நிதியில் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும். 2 ஆண்டுகளில் நவீன சிசிடிவி கேமராக்களுடன் அனைத்து ரெயில்களும் இயங்கும். 4,943 ஆளில்லா லெவல் கிராசிங்குகளுக்கு 2020ம் ஆண்டுக்குள் தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

More articles

Latest article