டில்லி

ட்டிட தொழிலாளர்கள் நலனுக்காக வசூலிக்கப்பட்ட வரியில் ரூ. 28000 கோடி கடந்த 23 வருடங்களாக உபயோகப்படுத்தாமல் உள்ளது.

கடந்த 1996 ஆம் வருடம் நாடாளுமன்றத்தில் கட்டுமானம் மற்றும் கட்டிட தொழிலாளர்கள் நலத்துக்காக கட்டுமான செலவில் ஒரு சதவிகிதம் கூடுதல் வரி விதிக்க சடம் இயற்றப்பட்டது. இந்த நிதியைக் கொண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டிடத் தொழிலாளர்கள் நல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்ப்பட்டது. இந்த வரி கடந்த 22 வருடங்களக் தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகிறது.

உச்சநிதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையின் போது மொத்தமுள்ள கட்டிடத் தொழிலாளர்களான 4 கோடி பேரில் வெறும் 1.5 கோடி தொழிலாளர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. எனவே ஒரு நல வாரியம் ஒன்றை மாநில வாரியாக அமைத்து இந்த வரியை அவர்கள் நலனுக்கு செலவழிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது.

இவ்வாறு வாரியம் அமைக்கப்பட்டு தொழிலாலர்களின் நலனுக்காக கணினி உள்ளிட்டவைகள் வாங்கி தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியது. அத்துடன் ஒரு சில மாநிலங்களில் மட்டும் சில நலத்திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதற்காக சுமார் ரூ.17,591 கோடி செலவாகி உள்ளது. மொத்தம் வரியாக வசூலிக்கப்பட்டதில் ரூ. 28000 கோடி இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

சட்டப்படி இந்த வரித் தொகை வேறு எந்த திட்டத்துக்கும் பயன்படுத்தக் கூடாது என உள்ளது. வேறு அமைப்பை சேர்ந்த தொழிலாலர்கலின் நலனுக்கும் பயன்படுத்த சட்டம் தடை விதிக்கிறது. எனவே இந்த ரூ.28000 கோடி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நல திட்டங்களை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் கெடு அளித்தும் எவ்வித திட்டமும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

இது குறித்து உச்சநீதிமன்றம் உடனடியாக கட்டிட தொழிலாளர்கள் நல நிதியை அவர்கள் நலனுக்கு உபயோகப்படுத்த உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம், “உங்களுக்கு ரூ. 30000 கோடியை உபயோகப்படுத்தாமல் கிடப்பில் போடுவது நகைச்சுவை என எண்ணுகிறீர்களா? உங்களின் இந்த மெத்தனத்தால் துயருறுவது யார் தெரியுமா? ஏழைகள் துயருறுகின்றனர். அவர்கள் மீது சிறிதும் இரக்கமின்றி நடந்துக் கொள்வது கண்டிக்கத்தக்கது” என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது இது குறித்த தொழிலாளர் நல அமைச்சகம் அவசர அவசரமாக பல திட்டங்களை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்துள்ளது. இந்த திட்டங்கள் குறித்து அமைசகத்தின் இணைய தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.