ரூ.227 கோடி மதிப்பு: கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்மு.க.ஸ்டாலின்…

Must read

சென்னை; ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொளி காட்சி மூலம்,  கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  தொடக்கம் ரூ.227 கோடி மதிப்பில்,  1,997 கிராமப் பஞ்சாயத்துகளில் 9 லட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி உள்ளோம் என கூறியவர், 5 ஆண்டுகளில் 12,525 கிராம ஊராட்சிகளில் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்துக்காக நாளை மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து வைக்கிறேன். உழவர்களின் நன்மையை முன்னிலைப்படுத்தும் திமுக அரசுக்கு இயற்கையும் ஒத்துழைப்பு தருகிறது என்று கூறினார்.

More articles

Latest article