சென்னை:

மிழகத்தில் ஒரு ஓட்டுக்கு ரூ.2ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். பணத்தை வாங்கிக்கொண்டு உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று கூறி உள்ளார்.

தமிழகத்தில் நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்து, 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், பல இடங்களில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில்,  காஞ்சிபுரம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் இதயவர்மன் ஆகியோரை ஆதரித்து மாம்பாக்கத்தில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு  வருகிறார். அப்போது, நீட் குறித்தும், 8 வழி சாலை குறித்தும், மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயலும், நிதின் கட்கரியும், அவர்களின் கூட்டணி கட்சிகளுக்கு முரணாக கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனால், அதுகுறித்து பாமக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லையே ஏன் என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசியவர், கூடியிருந்த மக்களிடையே  ஓட்டுக்கும் நோட்டுக் கொடுக்க தொடங்கி விட்டார்களா என  என கேள்வி எழுப்பினார். ஓட்டுக்கு அவர்கள் 2 ஆயிரம் ரூபாய் அல்ல 2 லட்ச ரூபாய் கூட வாங்கிக் கொண்டாலும் வாங்கிக்கொண்டு,  வாக்குகளை திமுகவுக்கு போடுங்கள் என்று கூறினார்.